இயேசு உயிர்ப்பின் திருவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை:
இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் மீண்டும் உயிர்தெழுந்த தினம் தான் ஈஸ்டர் ஞாயிறு. இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2வது வாரம் ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தேதி மாற்றம் ஏற்படும். ஆனால் கிழமை மாறுவதில்லை. ஈஸ்டர் தினமான இன்று அனைத்து தோவலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. தமிழகத்தின் ஆங்காங்கே உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் இரவில் கண்விழித்து கடவுளை பிரார்த்தனை செய்தனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த சிறப்பான தருணம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவி¢பக்தி எண்ணங்களை நாம் நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துக்களை உரிதாக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதைப் போலவே உண்மைகள் மீதும், சமூகநீதி மீதும் இன்று இருள் படிந்திருக்கலாம். ஆனால, அந்த இருள் அதிக காலம் நீடிக்காது. அதிக அளவாக 3 நாட்களில் இருள் விலகி ஒளி பிறக்கும் என்பது தான் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் உலகிற்கு சொல்லும் செய்தியாகும். இந்த உலகில் நிகழ்ந்த அனைத்து அநிதிகளும் விரையில் மறையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நீதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இயேசு போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான அச்சுறுத்தல் தலைதூக்கி வரும் நிலையில், இயேசுவின் அமுத மொழிகளைநினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்.

விசிக தலைவர் திருமாவளவன்:

வெகுமக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும், இதரவிளிம்புநிலை மக்களுக்கு எதிரான சனாதன பயங்கரவாதத்தை யும் வீழ்த்திட உறுதியேற்போம் என ஈஸ்டர் நன்னாளில் அறைகூவல் விடுத்து, அனைவருக்கும் ஈஸ்டர்நாள் வாழ்த்துகளைத் தெரிவிக் கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

ஈஸ்டர் திருநாள்அனைவருக்கும் புது நம்பிக்கையையும், மிகுந்த மகிழ்ச்சியையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். அது, எந்நாளும் தழைக்கட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சட்டப்பேரவை முன்னாள்உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்டோரும் ஈஸ்டர் திருநாள்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

இயேசு உயிர்ப்பின் திருவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400