சென்னை:
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இஸ்ரேலின் பயங்கரவாதத்தை கண்டித்தும் அதற்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் சென்னை மக்கா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர், மே பதினேழு இயக்க திருமுருகன் காந்தி, மாநில செயலாளர் செய்யது அலி ஆகியோர் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்து பேசினர்.
இதில் துணை தலைவர் முஹம்மது முனீர், துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, மாநில செயலாளர்கள் அபுபைசல், இனையத்துல்லாஹ், முஹம்மது யூசுப் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், ஆண்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






