எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது..!

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. தனது வெற்றிக்கான பயணத்தை தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகத்தை வகுப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத் பவார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரான், பகவந்த் சிங் மான், உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா,பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாயாவதி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாகவும், பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு முக்கிய தலைவர்கள் வந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு