கிறித்தவ கட்சிகளை ஒருங்கிணைப்போம் – மக்கள் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு…..

கிறித்தவர்களை அரசியல் கட்சி தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக திருச்சபையின் செயல் திட்டமாக பொது நிலையினர் பேரவை மற்றும் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் போன்றவைகள் செயல்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக திருச்சபை நிர்வாக பொறுப்பிலிருக்கும் ஆயர்களையும் தந்தையர்களையும் மமேக தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து மத்திய மாநில அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் அரசியல் பங்கீட்டையும் இட ஒதுக்கீட்டையும் ஏமாற்றி வருகிறார்கள். இனி எந்த கட்சியும் நம்பி பலனில்லை நமது உரிமைகளை நாம் தான் போராடி பெற வேண்டும் என்பதற்காக நமக்காக உருவாக்க பட்டது மக்கள் மேம்பாட்டு கழகம் இது கிறிஸ்தவர்களின் உரிமைக்காக போராடும் கட்சி இதற்கு ஆயர்களும் குருக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கட்சி M M K ஒரு தனி மனிதன் தலைவராக ஆக வேண்டும் என்பதற்காகவோ தனிமனிதன் MP MLA ஆக வேண்டும் என்பதற்காகவோ உருவாக்க பட்ட கட்சியல்ல. இது துறவரத்தார்களின் கூட்டு முயற்சியால் உருவாக்க பட்ட கட்சி. திருச்சபையாளர்களின் உதவியோடு வெற்றி பெறும் எதிர் காலத்தில் வருகிறது மற்ற கிறிஸ்தவ சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருச்சபையாளர்கள் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பார்கள் உதாரணத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி அந்த கட்சிக்கு விசுவாசமாக கட்டு பட்டு இருப்பார்களோ அதை போலவே கிறித்தவ MP MLA கள் திருச்சபைக்குள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்று உறுதியளித்த பின்னர் தான் TNBC கிறித்தவ வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் அரசியலாக வளராமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் அதில் முக்கியமான காரணம் ஒன்று திருச்சபையாளர்கள் இறை மக்களை நம்ப வில்லை அதனால் தான் எல்லா பொதுநிலையினர்களின் பதவிகளை குருக்களே வைத்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஆயர்களும் குருக்களும் அரசியல் ஈடு பட கூடாது என்று Common Law சொல்கிறது ஆனால் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் கிறிஸ்தவர்களை அரசியலில் ஈடுபடுத்த உருவாக்கபட்டது அதையும் ஒரு குருவானவரே வைத்து கொண்டால் கிறிஸ்தவர்கள் அரசியலில் எப்படி வளர முடியும். மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நோக்கம் கடந்த 75 – ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் அரசியல் உரிமைகள் இட ஒதுக்கீடு கிறிஸ்தவமதம் மாறிய ஒரே காரணத்திற்
காக மறுக்கப்பட்டு வருகிறது இதை திருச்சபையும் பெற்றுதரவில்லை அரசியல் கட்சிகளும் ஏமாற்றி வருகிறது.

இந்த தடைகளை தகற்காமல் இங்கு யாரும் தலைமை ஏற்க முடியாது இந்த பிரச்சினையை தொடதைரியமில்லாத நபர்கள் தலைமை ஏற்க முடியாது. ஆயர்கள் குருக்கள் அரசியல் தலைவர்களோடு இந்த விஷயத்தை பேசுவதற்கே தயங்குபவர்களால் ஒரு போதும் தலைவராக முடியாது.

இன்று எல்லா நிலைகளிலும் தம்மை செழுமை படுத்தி கொள்ளும் ஆளுமை பெற்ற கிறிஸ்தவர்களே அரசியல் கட்சிக்கு தனித்தன்மையோடு தலைவராக முடிகிறது கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்றாலும் ஒரு சில அரசியல் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் கிறித்தவ சமூகத்திற்கு வலியுறுத்துகிறது.

கிறிஸ்தவர்களே நீங்கள் தலைவர்களாக வாருங்கள் அரசியலில் வளருங்கள் என்று அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து சபைகளுக்கும் மக்கள் மேம்பாட்டு கழகம் அழைப்பு விடுக்கிறது.

இது வரையில் கிறிஸ்தவர்களை அரசியல் சக்தியாக ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கு அரசியல்வாதிகளும் ஆயர்களும் குருக்களும் தான் காரணம் என்பதை மக்கள் மேம்பாட்டு கழகம் ஆதாரத்துடன் புள்ளி விபரங்க
ளோடு சுட்டி காட்ட தயாராக இருக்கிறது.

இனியும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று நமக்குள் சண்டை போட்டு காலத்தை கடத்தாமல்
களத்தில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் எத்தனை ஆயிரம் ஆயர்களும் குருக்களும் போதகர்களும் பிரசங்கம் செய்தாலும் ரேஷன் கார்டு ஆதார் கார்டு பேன்கார்டு போன்ற பிறப்பு இறப்பு சர்டிபிகெட்டை திருச்சபை தர முடியாது வாக்குரிமை வழங்கும் அரசாங்கம் தான் வாழ்வளிக்க முடியும் என்று உண்மை தன்மையை திருச்சபையாளர்கள் புரிந்து கொண்டு கிறிஸ்தவர்களை அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்து கிறிஸ்தவர்கள் அரசியலில் பங்கேற்க சேய்ய வேண்டும்.

இதுவே இந்திய திருச்சபையில் உள்ள ஆயர்கள் குருக்களுக்கு துறவர சபைகளுக்கு இயேசு கிறிஸ்துவின் உண்மை
யான ஆன்மீக துறவர கடமையாகும் இதையும் மீரி திருச்சபையானது சாதி குருக்கள் சங்கங்களையும் கிறிஸ்தவர்
களுக்குள் சாதி சங்கங்களை ஊக்குவித்து தவறு செய்யும் துறவரத்தால் பவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக இயக்கவாதிகளை பயன்படுத்துவதை திருத்திக் கொள்ள வேண்டும். ஆயிரம் முரண்பாடுகளை கொண்ட RSS BJP ஒற்றுமையாக இருக்கும் போது ஒரே இயேசு கிறிஸ்துவை வணங்கும் கிறிஸ்தவர்கள் ஒன்று பட்டால் மூன்றில் ஒரு பங்கு இந்திய ஆட்சி கிறிஸ்தவர்கள் கையில் இருக்கும் இந்த நாட்டிலிருக்கும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்சதிலும் கிறிஸ்தவர்கள் அமர வேண்டும் ஏனென்றால் நாமும் இந்த மண்ணின் மைந்தர்கள் பூர்வீக குடிமக்கள் தான் கிறிஸ்தவர்களும் என்று விரைவில் ” கிறித்தவம் காப்போம் “மாநாட்டை அறிவிப்போம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கிறித்தவ கட்சிகளை ஒருங்கிணைப்போம் – மக்கள் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு…..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு