சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. பஸ்நிலையம் பின்புறம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டு பகுதியில் ரயில்வே தண்டவாள மேம்பாலம் அருகே குலசேகரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தினமும காலை சுமார் 6 மணிக்கு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை ஜோராக நடைபெறுவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இங்கு மது அருந்துபவர்கள் ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.