செங்கல்பட்டு:
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பொதுமக்களிடம் வாழ்த்துக்களை பெற்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த உடனேயே அவர் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினற்னர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொது மக்களை நேரடியாக சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்லாவரம் தன்சிங், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா, சிட்லப்பாக்கம் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம் ஜெயபிரகாஷ், பல்லாவரம் அ.திமு.க பகுதி செயலாளர் பல்லாவரம் ராஜப்பா, எம்.ஜி.ஆர் மன்ற மேற்கு மாவட்ட செயலாளர் குரோம்பேட்டை சுபாஷ், அ.தி.மு.க பம்மல் வடக்கு பகுதி செயலாளர் குரோம்பேட்டை வழக்கறிஞர் சதிஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





