செந்தில் பாலாஜியின் காவலை 34வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை தண்டனை 34வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜின் ஜாமீன் மனுவை சென்னை தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.  இன்றுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் 34-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றக் காவல் முடியும் ஏப்ரல் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அசல் ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400