முறைகேடு: சென்னையில் 30 ஆயிரம் ஆவின் பால் அட்டைதாரர்கள் நீக்கம்

சென்னை:
சென்னையில் தினமும் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.5 லட்சம் லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 9 லட்சம் பால் அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு 1 லிட்டர் பால் இந்த அட்டை மூலம் விநியோகிக்கப்படும். நீலம், பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அட்டைகள் மூலம் அதிகம் விற்பனையாகிறது. ஆரஞ்சு நிற பாக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவு.
பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு பால் பாக்கெட் கடைகளில் அரை லிட்டர் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு ரூ.23-க்கு வழங்கப்படுகிறது. இந்த பாக்கெட்டை வாங்கினால் லிட்டருக்கு 14 ரூபாய் மிச்சமாகிறது. இதனால் சிலர் தவறான முகவரி, ஆவணங்களை கொடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வந்தனர். இதன் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த முறைகேட்டை தடுக்க ஆவின் அதிகாரிகள், பால் அட்டைதாரர்களை நேரில் அழைத்து ஆய்வு செய்தனர். ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது, வாடகை வீடு ஒப்பந்தம் போன்றவற்றை ஆய்வு செய்ததில் சிலர் தவறான ஆவணங்களை கொடுத்து பால் அட்டையை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. கடந்த 2 மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வவில் 30 ஆயிரம் பால் அட்டைகள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த அட்டைகளை ரத்து செய்யப்பட்டது. தினமும் 15 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற ஆவின் பால் வணிக பயன்பாட்டிற்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
புதியதாக அட்டை தேவைப்படுபவர்களும் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வழியாக பதிவு செய்யலாம். ஆன்லைன் வழியாக பால் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வீட்டிற்கே தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் மூலம் வாங்க விரும்பாதவர்கள் மண்டல அலுவலகத்திலும், பால் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு