15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
நலக்குரியார் யாரெனின¢நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார். (குறள்: 149)
விளக்கம்:
கடலால் சூழப்பட்ட உலகத்தில் அனைத்து நன்மைகளுக்கும் உரியவர் யாரென்றால் பிறனுக்குரியவளின் தோளைத்தழுவாதவரே ஆவார்.







