21. தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்.
===========================================
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்
ஒருவன் சரியான நெறியிலிருந்து ஒரு பக்கமாக விலகிச் சென்ற பிறருக்குத் தீமை செய்யாதிருப்பானாயின், அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.







