நாளை முதற்கட்டமாக மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது..!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.

மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதியும், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதியும் முடிவடையும். இந்நிலையில், மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ளது.

அதேபோல், மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.

மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது.

மிசோரம் பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. பாஜகவும் தனித்து உள்ளது. இருந்தாலும், 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். மிசோ தேசிய முன்னணி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த முறை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.