“பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி”
மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கில் வரும் புதன்கிழமை (03.05.2023) காலை 09.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெறும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சியினை” தொடங்கி வைக்கிறார்.
இச்சிறப்பு பயிற்சியினை பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சியில், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் (தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள்) பணிபுரிந்து வரும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.







