சென்னை:
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மாலை 3.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவுடன் தற்போது கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்து இருந்ததது. இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், மீண்டும் சமாதன முயற்சி நடப்பதாக சொல்லப்பட்டது. இத்தகைய சூழலில், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






