நாங்குநேரியை போல கோவில்பட்டியில்… பிளஸ்-1 மாணவனை தாக்கிய சக மாணவர்கள்

கோவில்பட்டி:
நாங்குநேரி சம்பவத்தைப்போல் கோவில்பட்டியிலும் பிளஸ் 1 மாணவரை சக மாணவர்கள் தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார். அந்த மாணவனுக்கும், அதே பள்ளியில் பயிலும் பிளஸ்-1 படிக்கும் கழுகுமலையை சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு தனியாக அமர்ந்திருந்த லட்சுமிபுரம் மாணவரை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த மாணவனை அப்பகுதியினர் மீட்டு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். நாங்குநேரியில் உள்ள பள்ளியில் மாணவர், அவரது தங்கை மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை போல கழுகுமலையில் நடைபெற்று இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு