தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.07.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் மேம்பாடுகள் குறித்து ரோம், பாரீஸ், பார்ஸிலோனா நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விபரங்கள் மற்றும் புதிய திட்டப் பரிந்துரைகள் குறித்த அறிக்கையினை வழங்கினார்கள். உடன் கூடுதல் தலைமைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என். மகேசன், செயற்பொறியாளர்கள் ப. விஜய் அரவிந்த் மற்றும் ரா.ஆ. பிரபாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






