பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை   குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய ஒரு ஒப்பந்ததாரருக்கு காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும்,  போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும்,  மழைநீரானது  சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில்  மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு,  அதனடிப்படையில் பல்வேறு மழைநீர் வடிகால் பணிகள்  முடிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு மழை மற்றும் மாண்டஸ் புயலின் போதும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் புதியதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் வாயிலாக நீர்நிலை ஆறுகள் மற்றும் கால்வாயில் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் எவ்வித இடர்பாடின்றியும், போக்குவரத்துக்கு இடையூறின்றியும் சென்றிட வழிவகை ஏற்பட்டது.

 இதனைத் தொடர்ந்து மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்  மாண்புமிகு மேயர் அவர்களின் ஆலோசனையின்படியும் கோவளம் வடிநிலப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில்  ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணியானது  KFW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி ரூபாய் 1714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

இதில் முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம்  மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட   நங்கநல்லூர் முதல் பிரதான சாலை,  6ஆவது பிரதான சாலை,  ஹிந்து காலனி,  கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர்,  எல்.ஐ.சி நகர் ஆகிய பகுதிகளில் மூன்று சிப்பங்களில் ரூபாய் 150. 47 கோடி மதிப்பீட்டில் 39 . 7 8 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

 இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மண்டலம்  மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட   புவனேஸ்வரி நகர்,  பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில்  உள்ள எம். சி .என் நகர், விஜிபி அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில்  ரூபாய் 447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு  ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக  பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

ஒருசில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளை மேற்கொண்டு வரும் திருவாளர் ஆர்.பி.பி. எண்டர்பிரைசஸ், நிறுவனத்திற்கு காரணம் கேட்டு   குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி தகுந்த தடுப்புகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.             பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில்  உரிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி
செய்தி வெளியீடு

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு