தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 64வது பட்டமேற்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரையாற்றினார். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் மரு.சாந்திமலர், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பல்மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.விமலா, துணை முதல்வர் மரு.சபரிகிரிநாதன் மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.