ராய்ப்பூரில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை வகித்தார்

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் – பிரதமர்

காவல் துறை நடைமுறைகளை நவீனமயமாக்கி, மறுசீரமைக்க வேண்டும் – பிரதமர்

ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.  இந்த மூன்று நாள் மாநாடு ‘வளர்ச்சியடைந்த பாரதம்: பாதுகாப்பு பரிமாணங்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது .

காவல்துறை குறித்த பொதுமக்களின் பார்வையை, குறிப்பாக இளைஞர்களிடையே மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றி புதிதாக இயற்றப்பட்ட 3 சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

காவல்துறை விசாரணைகளில் தடயவியல் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், மேம்படுத்தப்பட்ட தடயவியல் பயன்பாடு குற்றவியல் நீதி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்று அவர் கூறினார். இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதிகளின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல், கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு முழு அரசு அணுகுமுறையையும், சமூக அளவிலான செயல்பாட்டையும் ஒன்றிணைப்பதும் அவசியம் என்று பிரதமர் கூறினார்.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன. காவல்துறை மேம்பாட்டுக்கான தொலைநோக்கு பார்வை 2047-ஐ நோக்கிய வழிகாட்டுதல், பயங்கரவாத எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பு,  வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை அழைத்து வந்து விசாரணை நடத்துதல் ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன.

புயல்கள், வெள்ளம், பிற இயற்கை அவசரநிலைகள், டித்வா புயல் போன்றவற்றை உள்ளடக்கிய பயனுள்ள பேரிடர் மேலாண்மைக்கான வழிமுறைகளை வலுப்படுத்த காவல்துறைத் தலைவர்களை வலியுறுத்திய பிரதமர், வலுவான தயார்நிலையின் அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற நிகழ்வுகளின் போது உயிர்களைப் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை திட்டமிடல், உடனடி ஒருங்கிணைப்பு ஆகியவையும் முழு அரசு அணுகுமுறையும் அவசியம் என்று அவர் கூறினார்.

சிறப்பு சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கங்களை புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கினார். நகர்ப்புற காவல் பணியில் சிறப்பாகச் செயல்படும் மூன்று நகரங்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணையமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த டிஜிபி-கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் இதில் நேரில் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காணொலி முறையில் இதில் பங்கேற்றனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு