ரூ.1000 உரிமை தொகை – முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர் பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல்வர் நியமித்துள்ளனர். உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு