தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் முக்கிய நடவடிக்கையாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை 44-ன் பானிபட்–ஜலந்தர் பிரிவில் உள்ள கரௌண்டா சுங்கச்சாவடியில், பல்வழி தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண வசூல் நடைமுறையைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.தடையற்ற வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கு வழிவகுப்பதன் மூலம், இந்த நடைமுறை வழக்கமான சுங்கச்சாவடிகளிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பட்ட மின்னணு சுங்கக் கட்டண வசூல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட தொலையுணர் கருவிகள் (சென்சார்கள்), கேமராக்கள், வாகனங்களை அடையாளம் கண்டு, ஃபாஸ்டேக் மூலம் கட்டணங்களை வசூலிக்க உதவுகிறது. இது நெடுஞ்சாலையில், வேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்கிறது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அனைத்து நெடுஞ்சாலைப் பயணிகளுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:ஃபாஸ்டேக் கணக்குகளில் அனைத்து தருணங்களிலும் போதிய கையிருப்பைப் பராமரிக்க வேண்டும்.ஃபாஸ்டேக் கணக்குகள் செயல்பாட்டில் இருப்பதையும், அவை வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.தெளிவான, விதிமுறைகளுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்புப் பதிவுத் தகடுகளை பயன்படுத்த வேண்டும்.சுங்கச்சாவடி மண்டலங்களுக்குள் போக்குவரத்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்ற வேண்டும்

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை
தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்






