15-7-23 சனிக்கிழமை தனது 90வது அகவை தொடங்கும், உலக சமயங்களை ஒன்றிக்கும் தமிழர் சமய ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர். பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், M.A. Phd., அவர்களின் உலக அமைதிக்கான மதங்களை கடந்த ஆன்மீக இறைத்தொண்டை பறைசாற்றும் வண்ணம், திருக்குறள் உண்மை உரை பேரவை ஒரு சிறப்பு விழாவை நடத்துகிறது. உலகத்தமிழ் சங்க தலைவர் கலைமாமணி செவாலியர் V.G. சந்தோஷம், VGP, அவர்கள் தலைமையில், முன்னாள் சென்னை மயிலை பேராயர் Dr. A. M. சின்னப்பா, SDB, அவர்கள் சிறப்புரை வழங்கி, தி.உ.உ.பேரவையில் அங்கம் வகிக்கும் பேராயர்கள் மற்றும் தமிழ் சான்றோர் வாழ்த்துறை வழங்க உள்ளனர். தமிழ் சித்தர் பேரவை தலைவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் அவர்கள் சைவம் போற்றும் ‘இயேசுபெருமானை புரிந்துகொள்வோம்’ எனும் நூலுக்கு மதிப்புரை வழங்க உள்ளார் மேலும் தமிழர் சமய ஆன்மயவியல் மாணவர்களுக்கு சிவனடியார் பட்டய சான்றுகள் அளிக்கப்பட உள்ளன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






