முதல்வர் கோப்பை: நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம்

சென்னை:
முதலமைச்சர் கோப்பை- 2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப்போட்டிகள் ஜுலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் கோப்பை & 2023 மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ &மாணவிகளுக்கான ஐந்து வகையான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் ஜூலை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றன. பள்ளிப் பிரிவில் 380 மாணவ & மாணவிகளும், கல்லூரிப் பிரிவில் 330 மாணவ & மாணவிகளும் என மொத்தம் 710 பேர் பங்கேற்றனர். இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் பின் வருமாறு:
பின்னோக்கி நீந்துதல் 200 மீட்டர் கல்லூரி ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு மாணவர் பெனடிக்சன் ரோஹித் முதலிடமும், திருநெல்வேலி மாணவர் லியோனார்டு இரண்டாமிடமும், சென்னை மாணவர் டெரல்ஸ்டீவ் மூன்றாமிடமும் பெற்றனர். கல்லூரி பெண்கள் பிரிவில், சென்னை மாணவி வர்ஷா முதலிடமும், செங்கல்பட்டு மாணவி ரக்சனா இரண்டாமிடமும், கோவை மாணவி ஸ்ரீநிதி மூன்றாமிடமும் பெற்றனர்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல் 200 மீட்டர் கல்லூரி மாணவர்கள் பிரவில் செங்கல்பட்டு மாணவர் விகாஸ் முதலிடமும், சென்னை மாணவர் சாய்கணேஷ் இரண்டாமிடமும், காஞ்சிபுரம் மாணவர் பென்ஹெனன் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் சென்னை மாணவி பிரியங்கா முதலிடமும், தஞ்சாவூர் மாணவி ஜாஸ்ரீ இரண்டாமிடமும், திருநெல்வேலி மாணவி செல்வரேவதி மூன்றாமிடமும் பிடித்தனர்.
தனிநபர் 400 மீட்டர் நீச்சல் போட்டியில் கல்லூரி மாணவர்கள் பிரிவில் செங்கல்பட்டு மாணவர் பெனடிக்சன் ரோஹித் முதலிடமும், சென்னை மாணவர் அகமத் ஹர்சாக் இரண்டாமிடமும், காஞ்சிபுரம்ம மாணவர் பென்ஹெனன் மூன்றாமிடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சென்னை மாணவி வர்ஷா முதலிடமும், கோவை மாணவி ஸ்ரீநிதி இரண்டாமிடமும், தஞ்சாவூர் மாணவி ஜாஸ்ரீ மூன்றாமிடமும் பிடித்தனர்.
ப்ரீஸ்டைல் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கல்லூரி ஆண்கள் பிரிவில் சென்னை மாணவர் சத்திய சாய் கிருஷ்ணன் முதலிடமும், செங்கல்பட்டு மாணவர் விகாஸ் இரண்டாமிடமும், காஞ்சிபுரம் மாணவர் பென்ஹெனன் மூன்றாமிடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சென்னை மாணவி வர்ஷா முதலிடமும், கோவை மாணவி ஸ்ரீநிதி இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாணவி சக்சனா மூன்றாமிடமும் பிடித்தனர்.
மார்பு 200 மீட்டர் நீச்சல் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர் தனுஷ் முதலிடமும், செங்கல்பட்டு மாணவர் பெனடிக்சன் ரோஹித் செங்கல்பட்டு மாணவர் பெனடிக்சன் ரோஹித் இரண்டாமிடமும், திருவள்ளூர் மாணவர் யதேஷ் பாபு மூன்றாமிடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சென்னை மாணவி பிரியங்கா புகழரசு முதலிடமும், கடலூர் மாணவி ரக்சனா இரண்டாமிடமும், கோவை மாணவி அபிஷா ஏஞ்சலின் மூன்றாமிடமும் பிடித்தனர்.
ப்ரீஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி மாணவர் ஜாஷுவா தாமஸ் முதலிடமும், மதுரை மாணவர் குணபாலன் இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாணவர் விஷால் மூன்றாமிடமும், மாணவிகள் பிரிவில் சென்னை மாணவி தீஷா சிவகுமார் முதலிடமும், கோவை மாணவி அத்விகா நாயர் இரண்டாமிடமும், திருநெல்வேலி மாணவி பாலபொன்னி மூன்றாமிடமும் பிடித்தனர்.
மார்பு நீச்சல் 100 மீட்டர் பள்ளி ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி மாணவர் ஜாஷுவா தாமஸ் முதலிடமும், சென்னை மாணவி ஹிதேஷ் பப்னா இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாணவி தர்ஷன் மூன்றாமிடமும், மாணவிகள் பிரிவில் திருநெல்வேலி மாணவி ஜாய் ஸ்ரீ முதலிடமும், திருவள்ளூர் மாணவி பிரீஷிதா இரண்டாமிடமும், கோவை மாணவி அக்ஷயா மூன்றாமிடமும் பிடித்தனர்.
பின்னோக்கி நீந்துதல் 100 மீட்டர் ஆண்கள் பிரிவில் நெல்லை மாணவர் பிரவீன் குமார் முதலிடமும், செங்கல்பட்டு மாணவர் விஷால் இரண்டாமிடம், சென்னை மாணவர் கிஷன் மூன்றாமிடமும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் சென்னை மாணவி பிரமதி ஞானசேகரன் முதலிடமும், திருநெல்வேலி மாணவி மரியா வின்சியா இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாணவி மஹாலக்ஷ்மி மூன்றாமிடமும் பிடித்தனர்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல் 100 மீட்டர் ஆண்கள் பிரிவில் சென்னை மாணவர் ஸ்ரீராம் முதலிடமும், கடலூர் மாணவர் அலோஷியஸ் இரண்டாமிடமும், மதுரை மாணவர் குணபாலன் மூன்றாமிடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சென்னை மாணவி ஸ்ரீநிதி நடேசன் முதலிடமும், மதுரை மாணவி ரோஷினி இரண்டாமிடமும், திருச்சி மாணவி தனுஜா மூன்றாமிடமும் பிடித்தனர்.
தனிநபர் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி மாணவர் ஜாஷுவா தாமஸ் முதலிடமும், செங்கல்பட்டு மாணவர் விஷால் இரண்டாமிடமும், மதுரை மாணவர் குணபாலன் மூன்றாமிடமும், பெண்கள் சென்னை மாணவி ஸ்ரீநிதி நடேசன் முதலிடமும், மதுரை மாணவி ரோஷினி இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாணவி மஹாலட்சுமி மூன்றாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவகளுக்கான பரிசரிப்பு விழா வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகையினை வழங்கினார். அனைத்து பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற வீரர் & வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

முதல்வர் கோப்பை: நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு