குடியரசு தின கொண்டாட்டங்கள் 2025: தேசிய பள்ளி இசைக்குழு இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 2024-25 -இன் இறுதிப்போட்டி 2025 ஜனவரி 24 & 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறும். ஜனவரி 25-ம் தேதி பரிசளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொள்வார்.ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) நான்கு அணிகள் வீதம் மொத்தம் 16 இசைக்குழு அணிகள் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வை புத்துயிர் பெறச் செய்யவும், முழுமையான கல்விக்கான பாதையில் அவர்கள் பயணிப்பதை  ஊக்குவிக்கவும் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு( முதல் இடம் – ரூ.21,000/-, 2-வது இடம் – ரூ.16,000/-, 3-வது இடம்- ரூ.11,000), ஒரு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பாதுகாப்பு படைகளின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் நடுவர் குழுவால் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400