18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
========================================
அஃகாமை செல்வதற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
விளக்கம்:
ஒருவனுடைய செல்வம் குறையாதிருக்க வழி எதுவென்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தல் ஆகும்.







