1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு – குறள் : 81
கணவனும் மனைவியும் வீட்டில் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் காத்து வாழ்வதெல்லாம் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரைப் பேணி அவர்க்குப் பலவகையிலும் உதவி செய்வதற்கே ஆகும்.







