பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

2026-ம் ஆண்டுக்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான பரிந்துரைகள், விண்ணப்பங்களை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் வரவேற்கிறது. விண்ணப்பங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் என்ற இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்படுகிறது. அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கும் இந்த விருது வழங்கப்படும்.

எந்தவொரு தனிநபரும், பள்ளி, கல்வி நிறுவனம், அமைப்பு ஆகியவையும் தகுதியான குழந்தைகளை பரிந்துரைக்கலாம். குழந்தைகள் தங்களைத் தாங்களே பரிந்துரை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அடிப்படை விவரங்கள், விருது பிரிவு குறித்த தகவல்கள், சமீபத்திய புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சாதனை குறித்த விளக்கக் குறிப்பையும் (ஆயிரம் சொற்களுக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான குழந்தைகளை அடையாளம் கண்டு பரிந்துரைக்க பள்ளிகள், இளைஞர் குழுக்கள், அரசு சாரா அமைப்புகள், ஊராட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் உணவு தயாரிப்பு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2-வது பரிசு பெற்றார்

கேரளத்தின் கொச்சியில் புதன் அன்று (01.07.2026) நடைபெற்ற இந்திய கடல் உணவு கண்காட்சி

பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

2026-ம் ஆண்டுக்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான பரிந்துரைகள், விண்ணப்பங்களை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் வரவேற்கிறது. விண்ணப்பங்கள் ஜூலை 31-ம்

தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய