3800 இடங்களில் நிறைவு கட்டத்தில் “எனது மண் எனது நாடு” இயக்கம்

புதுடெல்லி:
தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது
நாடு முழுவதும் 3800 இடங்களில் “எனது மண், எனது நாடு” நிகழ்வுகளுக்கு ஏற்பாடு அமிர்த கலச யாத் திரைகளுடன் “எனது மண், எனது நாடு” என்ற நாடு தழுவிய இயக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மக்கள் சந்திப்பு முன்முயற்சி நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண் டுள்ளது. ஒரு குறிப்பிடத்தக்கக் கூட்டு முயற்சியில், பல அமைச்சகங்கள், மாநில அரசுகள், நேரு யுவகேந்திரா, மண்டல கலாச்சார மையங்கள், மத்திய ஆயுதப் போலீஸ் படைகள், இந்திய அஞ்சல் துறை, நிலக்கரித் துறை ஆகியவை கிராமங்கள் மற்றும் வட்டார அளவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மண்ணை சேகரிக்கும் மகத்தான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சி லட்சிய இலக்கை அடைவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. சமூக சேவை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான அவர் களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. கலாச்சார அமைச்சகத்தின் மண்டல கலாச்சார மையங்கள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இந்த இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறந்த முறையில் சென் றடையவும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. 3800 க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே எனது மண், எனது நாடு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் பொதுமக்களின் பங்கேற்பு அபரிமிதமாக உள்ளது.
அமிர்த கலச யாத்திரைகள் ஆக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லியில் ஒரு பிரமாண்ட விழாவில் கட மைப் பாதையில் அதன் இறுதிக்கட்டத்தை அடையும். இந்த நாடு தழுவிய முன்முயற்சியின் மகத்தான இறுதி நிகழ்வின் போது, நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்ன கலசம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணைக் கலப்பதற்காக வைக்கப்படும். மேலும் அமிர்தத் தோட்டம் மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னத்தில் சம்பிரதாயபூர்வமாக வைக்கப்படும். இந்தக் கொண்டாட்டம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வசீகரிக்கும் ஒளி,ஒலி நிகழ்ச்சிகளால் செறிவூட்டப்படும்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு