“மக்கள் தொகை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்“: மத்திய அமைச்சரின் விநோத கருத்து

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளாதால் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.
ஆளும் பாஜக விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நடாகவின் ஹசன் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.
தேர்தல் பரப்புரையில் பேசிய பிரகலாத் ஜோஷி கூறியதாவது: “நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு மின்சார வசதியைக் கூட கொண்டு சேர்க்கவில்லை. கிராமங்களுக்கு மின்சார வசதியே அப்போது இல்லை. பிரதமர் மோடியின் வருகைக்கு பின்னர் தான் அனைவருக்கும் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கிறது.
காங்கிரஸ் கட்சி மின்சாரம் முறையாக வழங்காததால் தான் நாட்டின் மக்கள் தொகை அதிகரித்தது. இவர்கள் தான் மக்களுக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறுகின்றனர்.இது எப்படி சாத்தியம் என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு மின்சாரம் தராததால் தான் மக்கள்தொகை அதிகரித்தாக மத்திய அமைச்சர் பேசியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. அமைச்சரின் கருத்து மிகவும் மோசமானது என காங்கிரஸார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்