இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது, தொடக்க ஆட்டக்காரர்களான டேவிஸ் ஹெட் மற்றும் மிட்ஷெல் அதிரடியாக ஆடினர். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாச்சிய வண்ணம் இருந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணியில் இருந்த பந்து வீச்சாளர்களில் ஐந்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிறந்த பார்மில் இருந்த மிட்ஷெல் மார்ஷ் மற்றும் டேவிஸ் ஹெட் இருவரும் தங்களது அதிரடியை குறைக்க வில்லை.
இறுதியில், 11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்ஷெல் மார்ஸ் 66 ரன்களும் எடுத்து இருந்தனர்.






