இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு – ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண் பயணம்..

புதுடெல்லி: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந் நிலையில், அந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, “சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் இந்தியா அதன் விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. இந்தியாவின் முதல் சூரியத் திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்குப் பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளின் இந்த முயற்சிகள் பிரபஞ்சத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் பயன்படும்” என்று கூறியுள்ளார். அதேபோல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், “ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒரு மைல்கல் சாதனை. இது விண்வெளியை இன்னும் சிறப்பாக ஆராய உதவும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. 63 நிமிடங்களுக்குப் பின்னர் ஆதித்யா எல்-1 விண்கலன் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு