செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் மற்றும் பல்லாவரம் வட்டத்திற்கும் உட்பட்ட தாம்பரம் சாணடோரியம் மெப்ஸ் பகுதியில் (ஏற்றுமதி வாளகத்தில்) உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டு துர்கா நகர் பகுதியில் உள்ள ஏரியில் கலக்கின்றது. இதனால் இப் பகுதியில் உள்ள நிலத்தடிநீர் மாசுபடிவதால் குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை என்பதை இந்த பகுதி வாழ் மக்கள் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கவனத்திற்கு கொண்டு சென்றதினால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த பகுதிகளில் மெப்ஸ் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய கழிவுநீர் தேக்கத்தை புகைப்படம் எடுத்து மெப்ஸ் ஏற்றுமதி வாளக அதிகாரிகளை சந்தித்து கழிவுநீரால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பேசி மீண்டும் இது போன்று கழிவுநீர் வெளியேறாமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தபட்டது.
மேலும் இதனை தொடர்ந்து பல்லாவரம் துறைபாக்கம் ரேடியன்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது பாதாள சாக்கடை பைப்லைன்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கிநிற்ப்பதை குறித்தும் ஆய்வு செய்யபட்டது. இதனை தொடர்ந்தும் குரோம்பேட்டை G.S.T.ரோடு நியூகாலனி போன்ற பகுதிகளின் மழைநீர் வடிகால் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளபட்டது. ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பெட்சிஞானலதா பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார் பொறியாளர் மற்றும் சந்திரன் சிறிதரன் பாபுஜி பாலாஜி ஆண்டவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.







