ரூ. 358.15 கோடி செலவில் 3,010 குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.7.2023) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 358 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் சந்தோஷ் நகர் பகுதி 1 திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 தளங்களுடன் 57 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 410 புதிய குடியிருப்புகள், சந்தோஷ் நகர் பகுதி 2 தூண் மற்றும் 14 தளங்களுடன் 20 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் 150 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி – 1 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 94 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 648 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி – 2 தூண் மற்றும் 11 தளங்களுடன் 57 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் 396 புதிய குடியிருப்புகள்;
செங்கல்பட்டு மாவட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், காயரம்பேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 7 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன் 25 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 480 புதிய குடியிருப்புகள்;
வேலூர் மாவட்டம், பத்தலபல்லி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 33 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள்; தருமபுரி மாவட்டம், மோலையானூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதி – 3 திட்டப்பகுதியில் தரைத்தள இரட்டை குடியிருப்புகள் 10 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் 110 குடியிருப்புகள்; கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 358 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1583.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு