ஸ்ரீநகர், காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், லடாக்கின் பாங்காங் ஏரி பகுதிக்கு சென்றார். மேலும், லடாக்கில் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார். ஸ்ரீநகர், காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், லடாக்கின் பாங்காங் ஏரி பகுதிக்கு சென்றார்.
லடாக் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றார். 2 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு ராகுல்காந்தி நேற்று சென்றார். லடாக்கின் கார்கில் இருந்து சாலை வழியாக காஷ்மீரின் கன்டர்பெல் மாவட்டத்திற்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு அவர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் காஷ்மீர் சென்றுள்ளார். அவர் ராகுல்காந்தியை ஸ்ரீநகரில் இன்று சந்திக்க உள்ளார். முன்னதாக காஷ்மீர் சென்றுள்ள சோனியா காந்தி ஸ்ரீநகரில் உள்ள நிகீன் ஏரியில் படகு பயணம் செய்தார். சோனியா காந்தி படகு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.







